• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை… குப்பை கிடங்கை சவக்குழியாக மாற்றிய சைக்கோ கில்லர்… அதிர்ச்சி சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
July 16, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மனைவி உட்பட 42 பெண்கள் கொடூர கொலை… குப்பை கிடங்கை சவக்குழியாக மாற்றிய சைக்கோ கில்லர்… அதிர்ச்சி சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய தலைநகர் நைரோபியின் சோவெட்டோ பகுதியில் பயன்பாட்டில் இல்லாத குவாரி ஒன்று அமைந்துள்ளது. புழக்கத்தில் இல்லாத இந்த குவாரி, தற்போது குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த குப்பைக் கிடங்கையும் சைக்கோ கில்லர் ஒருவர், சவக்குழியாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 11 ஆம் தேதி வழக்கத்திற்காக மாறாக சோவெட்டோ குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் மூட்டை கிடந்துள்ளன. அவற்றை சோதனை செய்த போலீசார், அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பைக்குள் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அதை எடுக்கும்போது அடுத்தடுத்து 9 பிளாஸ்டிக் பைகளில், பெண்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

9 பெண்களின் உடல்களையும் மீட்கப்பட்ட நிலையில், கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். துப்பு ஏதும் கிடைக்காமல் போலீசார் குழம்பிப் போய் நின்றபோது, கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் செல்போன் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: 
டிரம்பிற்கு மாதம் ரு.376 தேர்தல் நிதி கொடுக்க எலான் மஸ்க் திட்டம்

அதை ஆய்வு செய்ததில் 33 வயதான காலின்ஸ் ஜுமைசி கலூஷா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள காலின் ஜுமைசி வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிடைத்த பொருட்கள் மூலம், அவர் தான் சீரியல் கில்லர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.

விளம்பரம்

இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. 9 பெண்களை கொலை செய்தது நான் தான் என்று அவர் ஒப்புக்கொண்டார். அடுத்து கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த கென்யாவையே குலைநடுக்க வைத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலில் தனது மனைவியை கொலை செய்தாக கூறிய காலின்ஸ் ஜுமைசி, அடுத்தடுத்து பல இளம் பெண்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதுவரை, 42 பெண்களை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், 9 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க:  
நிலவில் ரகசிய குகை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்… மனிதர்கள் வாழலாம் என தகவல்!

எஞ்சிய பெண்கள் எப்படி கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கு உள்ளன என்பது குறித்து மேற்கொண்டு அவர் வாய் திறக்கவில்லை. கென்யாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பேசிய, அந்நாட்டு குற்ற புலனாய்வு இயக்குநரக தலைவர் முகமது அமீன், கைது செய்யப்பட்டுள்ள காலின்ஸ் ஜுமைசி, அனைத்து பெண்களையும் ஒரே பாணியில் கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

உடல் பாகங்களை வெட்டியும், சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பெண்களை கொடூரமாக கொலை செய்ததற்கான காரணம் என்ன, பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, சைக்கோ கில்லர் காலின்ஸ் ஜுமைசியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு ஆனால் 3 லட்சம் வருமானம்… ப்ரோக்கோலி சாகுபடி முறைகள்…

Next Post

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

Next Post
இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin