மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு சியரா லியோன். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லறைகளைத் தோண்டி மனித எலும்புகளை எடுக்க முயற்சி செய்துள்ளனர். சூழலை கட்டுப்படுத்த முடியாத அரசு, தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அப்படி அதில் என்ன இருக்கிறது? போதைக்கும் மனித எலும்புக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.
சியரா லியோன் நாட்டில் இளைஞர்களுக்கு இடையே குஷ் எனப்படும் போதைப்பொருள் பெருமளவில் உபயோகத்தில் உள்ளது. இதர போதைப்பொருட்களை போல் இல்லாமல், இது அதிக போதை தன்மைக் கொண்டதாக இருக்கிறது. எடுத்துகொண்ட சில நிமிடங்களில், தன்னிலை மறக்கும் இளைஞர்கள் ஜாம்பி போன்று நடந்துகொள்ள தொடங்கி விடுகின்றனர்.
குஷ் போதைப்பொருள் என்றால் என்ன..?
குஷ் போதைப்பொருள் தயாரிக்க முதன்மையாக இருப்பது மனித எலும்பு. மனித எலும்புடன் சில நச்சு பொருட்கள் சேர்க்கப்பட்டு இந்த போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இதர போதைப்பொருட்களை காட்டிலும் அதிக தீங்கு விளைவிக்கும் இது, மனித உறுப்புகளை தாக்கி சேதமடைய செய்கிறது. இதை எடுத்துகொள்ளும் இளைஞர், இயல்பில் இருந்து வேறுபட்டு தூக்கத்திலேயே நடப்பது, தலைகளை சுவர்களில் மோதிக்கொள்ளுவது, தன்னிலை மறந்து திரிவது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக்கின்றனர்.
அந்த நாட்டில் மருத்துவமனைகளின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 63 சதவீத பேர் இந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று தரவுகள் குறிக்கின்றன. 2020 – 2023 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மட்டும் இந்த போதைக்கு அடிமையானவர்களில் அளவு 4,000% மடங்கு அதிகரித்துள்ளது.
கல்லறைகளை தோண்டும் இளைஞர்கள் :
குஷ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அதனைத் தயாரிக்க முக்கிய வேதிப்பொருளாக விளங்கும் மனித எலும்புகளின் தேவை அதிகரித்தது. இதனால் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கல்லறைகளை தோண்டி அதில் இருக்கும் எலும்புகளை எடுக்க தொடங்கினர்.
குஷ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ஜூலியஸ் மாடா பயோ, இந்நிலையை தேசிய அவசரநிலையாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, கல்லறைக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Also Read : வெடிக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்.. என்ன நடந்தது?
இந்த சூழ்நிலையை சாமாளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சியரா லியோன் நாட்டை தவிர இந்த குஷ் போதைப்பொருள் அண்டை நாட்டிலும் பரவியுள்ளதால், மேற்கு ஆப்பிரிக்காவில் அசாரணமான சூழல் நிலவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
