Last Updated:
மத்திய பட்ஜெட்டில் மூத்த குடிமக்களின் சேமிப்பு மீது கிடைக்கும் ஒரு லட்சம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அழிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000 வரையில் வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதன் முதல் பகுதி பிப்ரவரி 13ம் தேதி வரையும் இரண்டாம் பகுதி மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த போது, வளர்ச்சியை துரிதப்படுத்துதல், தனியார் துறை முதலீடுகளை ஊக்குவித்தல், நடுத்தர வர்க்கத்தின் செலவின சக்தியை அதிகரித்தல் ஆகியவற்றை மையப்படுத்தி பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததில் மூத்த குடிமக்கள் மற்றும் அஞ்சல் துறை பயனாளர்களுக்குமுக்கிய சலுகையை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர்பேசுகையில், “நிரந்தர வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் வட்டி மீதுடிடிஎஸ் விலக்கு வரம்பு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக அதிகரிக்கப்படும். மொத்த வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான வரி விலக்கு வரம்பை கொண்ட மூத்த குடிமக்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் வட்டி வருமானத்தில் டி.டி.எஸ் கழிக்கப்பட்டது. அவர்கள் பணத்தைத் திரும்பப் பெற வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ரீஃபண்ட் கோருவதைத் தவிர்க்க, மூத்த குடிமக்கள் படிவம் 15H ஐ சமர்ப்பித்து TDS கழிக்க வேண்டாம் என்று வங்கியிடம் கோரலாம். ஒரு லட்சம் விலக்கு வரம்பு மூத்த குடிமக்களின் இணக்க சுமையை குறைக்கும்.
மிகவும் பழமையான தேசிய சேமிப்புத் திட்ட கணக்குகளை கொண்ட மூத்த குடிமக்கள் இனி வட்டியை ஈர்க்காது. எந்த வரியும் இல்லாமல் தங்கள் சேமிப்பை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்திய தபால் துறை மூலம் 1.5 லட்சம் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் அமைக்கப்படும். இந்திய தபால் துறை சரக்குகளை கையாளும் மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்” என தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் அறிவிப்பால் மூத்த குடிமக்கள் மற்றும் அஞ்சல் துறை பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
February 01, 2025 6:25 PM IST

