ஈரானின் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதலில் அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், தனது உத்தரவின் பேரில் அமெரிக்க மத்திய கட்டளை மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் எச்சரிக்கை
“எங்கள் ஆயுதங்கள் உலகில் உள்ள மிக சக்திவாய்ந்ததும் நவீனமானதுமாகும். ஆனால் மனிதாபிமான காரணங்களால் அந்த தீவில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகளை நான் அழிக்கவில்லை,” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஈரால் அல்லது வேறு யாராவது ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் சுதந்திரத்தைத் தடுக்க முயன்றால், அந்த எண்ணெய் கட்டமைப்புகளையும் தாக்கும் முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் 90 வீத எண்ணொய் ஏற்றுமதி
கார்க் தீவு ஈரான் கடற்கரைக்கு அருகில் உள்ள சுமார் ஐந்து மைல் நீளமான தீவாகும். அந்த தீவு ஈரானின் மொத்த மூல எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90 வீதத்தை கையாளும் முக்கிய மையமாக உள்ளது.

இந்நிலையில், கார்க் தீவை முழுமையாக கைப்பற்ற அல்லது நேரடியாக தாக்க முயற்சித்தால் அதற்காக பெரிய அளவிலான நிலப் படைகள் தேவைப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், அத்தகைய நிலப் படைகளை அனுப்புவதில் ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை தயக்கம் காட்டி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
