• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்… மருந்து தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சூடான்? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்… மருந்து தட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் சூடான்? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 18, 2026 11:38 AM IST

சுமார் 4,00,000 நோயாளிகளுக்குச் சேவை செய்யும் 90 சூடான் அரசு மருத்துவமனைகள், நாட்டில் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகிறது.

சூடான் மருந்து தட்டுப்பாடு
சூடான் மருந்து தட்டுப்பாடு

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் காரணமாக, மத்திய கிழக்கிலுள்ள நாடுகள் அனைத்துமே கடுமையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் சூடானில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் விரைவில் பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக வான்வெளி மூடல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தம் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உலுக்கியுள்ளது. அந்த வகையில் சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாயில் உள்ள துறைமுகங்களில் சிக்கியுள்ளன. இதனால் சுமார் 4,00,000 நோயாளிகளுக்குச் சேவை செய்யும் 90 சூடான் அரசு மருத்துவமனைகள், நாட்டில் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றன.

மருந்து

Save the Children என்ற தொண்டு நிறுவனம் இதுபற்றி கூறுகையில், “இன்னும் இரண்டு வாரங்களில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படாவிட்டால், பல நோயாளிகள் அடிப்படை மருத்துவ வசதியே கிடைக்காமல் அவதிப்படுவார்கள். ஆண்டிபயாடிக்ஸ், குடற்புழு நீக்க மருந்துகள், வலி, காய்ச்சல் மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள், டெங்கு – மலேரியாவுக்கான தடுப்பு மருந்துகள் என பல மருந்துகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது” என்றுள்ளது. இதற்கிடையே தற்போது விநியோகப் பாதை மாற்றப்படுவதால், சூடானில் சரக்குக் கட்டணம் 25 – 30% உயர்ந்துள்ளது. ஏற்கெனவே போர்ச்சூழலால் சூடானுக்கு நன்கொடை அளிக்கும் சில நிறுவனங்கள் பின்வாங்கியுள்ளதால், அங்கு கடுமையான நிதித்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துகள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Mar 18, 2026 11:38 AM IST

Read More

Previous Post

Erode Weekly Textile Market Hit Hard – Business Drops from Rs.5 Crore to Rs.50 Lakh | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post

மருத்துவமனை காப்பகத்தில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். – Malaysiakini

Next Post

மருத்துவமனை காப்பகத்தில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin