இதன் விளைவாக, அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்த நீரிணை வழியாகப் பயணித்தபோது, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையினர் (IRGC) அவற்றை எதிர்த்து, “சர்வதேச சட்டத்திற்கு இணங்கியே கடந்துசெல்ல வேண்டும். எங்கள் அரசு போர்நிறுத்த விதிகளுக்குக் கட்டுப்படவே விரும்புகிறது. இதுவே கடைசி எச்சரிக்கை. இராணுவக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயற்சித்தால், உறுதியான மற்றும் வலுவான பதிலடி” கொடுக்கப்படும் என எச்சரித்தது.
இதற்கிடையில், அமெரிக்க இராணுவம் அப்பகுதிக்கு மேலும் அதிக போர் ஆற்றலைத் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

மூன்றாவது விமானம் தாங்கி கப்பலும், ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களும், இந்த மாத இறுதியில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல நீண்ட தூர பயண ஏவுகணைகளும் மத்திய கிழக்குக்கு வந்துகொண்டிருக்கின்றன.
ராபிடான் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் பாப் மெக்நாலி, “தொடர்ந்து போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தபோதிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மற்றொரு இராணுவ மோதல் விரைவில் ஏற்படக்கூடும். அமெரிக்கா இரண்டாம் சுற்றுக்குத் தயாராகி வருகிறது எனக் கருதுகிறேன்.

