Last Updated:
மத்திய அரசு கடந்த நவம்பர் 3, 2025 அன்றுதான் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக்குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தாமதம் ஆனாலும், புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 2026 யை கணக்கிட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படும். 7-வது ஊதியக்குழு 2016 ஜனவரி 1 அன்று அமல்படுத்தப்பட்டதால், 8-வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 அதாவது இந்த மாதம் முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும.
மத்திய அரசு கடந்த நவம்பர் 3, 2025 அன்றுதான் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக்குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசு 18 மாதங்கள் கால அவகாசம் அதாவது மே 2027 வரை வழங்கியுள்ளது.
எனவே, பரிந்துரைகள் முழுமையாகத் தயாராகி அரசுக்குக் கிடைக்க இன்னும் 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம். ஆனால் தாமதம் ஏற்பட்டாலும், புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும். 2026 ஜனவரி முதல் புதிய சம்பளம் நடைமுறைக்கு வரும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான வித்தியாசத் தொகை ஊழியர்களுக்கு மொத்தமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 2028-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரிய நிதிச்சுமை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரூ. 18,000 ஆக இருக்கும் ஆரம்பக்கட்ட அடிப்படை ஊதியம், ரூ. 34,000 முதல் ரூ. 51,000 வரை உயர வாய்ப்புள்ளது.
அந்த வகையில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பரிந்துரைகள் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தாமதமானாலும் ஜனவரி 2026 முதல் கணக்கிடப்படும் நிலுவைத் தொகை!


