Last Updated:
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம், சிபிஎம் – பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து பேசியிருக்கும் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, தேசிய கல்விக் கொள்கையை மாநிலம் எதிர்த்த போதிலும், மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே இந்த திட்டத்தில் கையெழுத்திட இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதி உள்பட குறைந்தது ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி நிலுவையில் இருப்பதாகவும் அமைச்சர் சிவன்குட்டி குறிப்பிட்டுள்ளார். விளிம்புநிலை சமூக மாணவர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிதி உதவும் என்றும், ஊழியர்களுக்கான நிதி பிரச்சினை இருப்பதாகவும் அவர் விளக்கியிருக்கிறார்.
இதனிடையே மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம், சிபிஎம் – பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து பேசியிருக்கும் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சன்னி ஜோசப், அமைச்சரவையில்கூட விவாதிக்காமல், பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் இணையும் முடிவை கேரள அரசு எடுத்திருப்பதாகவும், சிபிஎம் – பாஜக இடையே இருந்த உறவு வெளிவந்துள்ளது என்றும் சாடியுள்ளார்.
October 20, 2025 9:16 PM IST