• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மத்திய அரசின் எச்சரிக்கை.. உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..! | Mark Zuckerberg Issues Public Apology to Indian Government Over CSAM, Deepfakes & Platform Errors

GenevaTimes by GenevaTimes
August 5, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மத்திய அரசின் எச்சரிக்கை.. உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..! | Mark Zuckerberg Issues Public Apology to Indian Government Over CSAM, Deepfakes & Platform Errors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசின் எச்சரிக்கை.. உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..!

சமுக வலைத்தளத்தில் மிகவும் முக்கியமான நிறுவனமாக இருக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களை நிர்வாகம் செய்யும் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் இந்திய அரசிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் வெளியானதை எதிர்த்து காக்ரோச் ஜனதா கட்சியினர் மற்றும் ஜென்Z இளைஞர்கள் இணைந்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்திய போது பிரதமர் மோடி, போராட்டக்காரர்களுக்கும், மாணவர்களுக்கும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.

மத்திய அரசின் எச்சரிக்கை.. உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..!

இந்த வீடியோ பேஸ்புக்கில் இருந்து திடீரென நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் திரும்ப கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்பு குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் தளத்தில் பணம் செலுத்தி ப்ரோமோட் செய்யப்பட்ட வீடியோ பரவி வருவதாக பிபிசி ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வீடியோவை விளம்பரமாக மக்கள் மத்தியில் உலா வருவதாகலும், விளம்பரத்தை கிளிக் செய்தால் டெலிகிராம்-ல் ஒரு சேனலில் 99 ரூபாய்க்கு இந்த வீடியோ விற்கப்படுவதாக பிபிசி தனது அறிக்கையில் தெரிவித்தது.

உலகளவில் இயங்கி வரும் ஒரு சமுக வலைத்தளம் எப்படி இத்தகைய வீடியோக்களை ஆய்வு செய்யாமல் விளம்பரம் செய்யும் அளவுக்கு மோசமான நிர்வாகத்தை செய்கிறது என அரசு தரப்பில் கடந்த சில வாரங்களாக மெட்டா நிறுவனத்திற்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகிறது.

இதேபோல் மாணவர்கள் போராட்டத்தில் மெட்டா நிறுவனத்தின் தளங்கள் ஒரு சாரார் வீடியோக்களை மட்டுமே அதிகம் பகிரப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியது. இதேபோல் இந்த போராட்டத்தில் அரசை விமர்சனம் செய்யும் வீடியோக்களை நீக்கவும் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று மெட்டா நிறுவனத்தின் தலைமை உலகளாவிய விவகார துறை அதிகாரி ஜோயல் கப்லான், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் சுமார் 45 நிமிடம் ஆலோசனை செய்தனர். இத்கூட்டம் முடிந்த பின்பு ஐடி துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுக்குறித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்க் ஜூக்கர்பெர்க், தங்களுடைய தளத்தில் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வீடியோக்கள் இருந்தது, டீப்பேக் கன்டென்ட் பகிரப்பட்டது, தங்களுடைய தளத்தில் இருந்த கோளாறுகளுக்கு இந்திய அரசிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் மெட்டா நிறுவனம் பாலியல் தொடர்பான வீடியோக்களுக்கு பணம் கொடுத்து பூஸ்ட் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டது. இந்த தவறுக்கு தாங்கள் மிகவும் வருந்துவதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடியின் நீக்கப்பட்டது தொழில்நுட்ப கோளாறு என மெட்டா அப்போது விளக்கம் கொடுத்தாலும், இத்தகைய பதிலை ஏற்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினரான Nishikant Dubey தலைமையில் நாடாளுமன்ற குழு அமைத்து மெட்டா அதிகாரிகளுக்கு சமன் அனுப்பி நேரில் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவில் மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியதற்காக 3 நாட்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Share This Article

English summary

Mark Zuckerberg Issues Public Apology to Indian Government Over CSAM, Deepfakes & Platform Errors

Mark Zuckerberg Issues Public Apology to Indian Government Over CSAM, Deepfakes & Platform Errors — மத்திய அரசின் எச்சரிக்கை.. உடனே பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்..!

Story first published: Wednesday, August 5, 2026, 19:34 [IST]

Other articles published on Aug 5, 2026

Read More

Previous Post

“முகப்பருவால் முகம் காட்டவே பயந்தேன்” – மனம் திறந்த நடிகை ஷிவாங்கி ஜோஷி! – Sri Lanka Tamil News

Next Post

சமூக ஊடகங்கள் மோசடி மற்றும் சூதாட்ட உள்ளடக்கங்களை தானியங்கியாக நீக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post

சமூக ஊடகங்கள் மோசடி மற்றும் சூதாட்ட உள்ளடக்கங்களை தானியங்கியாக நீக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin