மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர்.
பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பகலில் பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் 15 பேருக்கு மேல் சிக்கியிருக்கக் கூடும் என்று முதல்கட்ட தகவல் வெளியானது.
தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

