கா்நாடகத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் மஜத வென்றுள்ளது. மண்டியா தொகுதியில் எச்.டி.குமாரசாமியும், கோலாா் தொகுதியில் மல்லேஷ்பாபுவும் வென்றுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் மஜத போட்டியிட்டிருந்தது. ஆனால், ஹாசன் தொகுதியில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளாா்.

