• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான குடிநீரை பருகிய 22 பேருக்கு உடல்நலக்குறைவு… அவலத்தின் பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 23, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான குடிநீரை பருகிய 22 பேருக்கு உடல்நலக்குறைவு… அவலத்தின் பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 23, 2026 10:06 PM IST

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி வருகிறது. இந்த நகரில்தான் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் சுமார் 23 பேர் உயிரிழந்த சோகம் அண்மையில் அரங்கேறியது.

Rapid Read
News18
News18

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்து 22 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சுத்தமான நகரம் எனப் பெயர் பெற்ற பகுதியில் அரங்கேறி வரும் அவலத்தின் பின்னணி என்ன?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகி வருகிறது. இந்த நகரில்தான் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் சுமார் 23 பேர் உயிரிழந்த சோகம் அண்மையில் அரங்கேறியது.

அந்நகரின் பகீரத்புரா பகுதியில் நர்மதா நதியிலிருந்து குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த பகுதியில் ஒரு பொது கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசுபட்டது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பலரும் மாசு கலந்த நீரை பருகி உள்ளனர்.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரே நாளில் நகரமே பெரும் ரணகளமானது. பலரும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல், வயிற்றுப்போக்கு என வரிசையாக மருத்துவமனைகளில் குவிய ஆரம்பித்தனர். பலர் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டாலும், இந்த மோசமான சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 23 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சூழலில் மீண்டும் அதே அசம்பாவிதம் தற்போது அப்பகுதியில் அரங்கேறி இருக்கிறது. இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீண்டும் கழிவுநீர் கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் 22 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புதர்காட்டில் கிடந்த மாணவியின் சடலம்.. காதலன் சொன்ன பகீர் வாக்குமூலம்.. போலீசார் அதிர்ச்சி!

இவர்களில் மோசமான நிலையில் இருக்கும் 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

ஏற்கனவே 23 பேரை பறிகொடுத்திருக்கும் மத்தியப்பிரதேச மாநில அரசு மீண்டும் அதே சிக்கலில் சிக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

Jan 23, 2026 10:06 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மத்தியப் பிரதேசத்தில் அசுத்தமான குடிநீரை பருகிய 22 பேருக்கு உடல்நலக்குறைவு… அவலத்தின் பின்னணி என்ன…?

Read More

Previous Post

மாகாண சபை தேர்தல் தொடர்பில் நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்!

Next Post

எல்லை சரிசெய்தல் அறிவியல் பூர்வமானது, அரசியல் சலுகை அல்ல – அமைச்சர் – Malaysiakini

Next Post
எல்லை சரிசெய்தல் அறிவியல் பூர்வமானது, அரசியல் சலுகை அல்ல – அமைச்சர் – Malaysiakini

எல்லை சரிசெய்தல் அறிவியல் பூர்வமானது, அரசியல் சலுகை அல்ல – அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin