மது அருந்திய பின்னர் மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவோட்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
29, 28, 27 மற்றும் 26 வயதுடைய அந்தப் பெண்கள், ஹொரானா மற்றும் கொனபாலவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர்வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹொரானா, ரெமுனா பலப்பிட்டியவில் உள்ள அந்த விடுதியில் மது அருந்திய பின்னர் அந்த நான்கு பெண்களும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீதி சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரால் கைது
போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்த அங்குருவோட்டோ காவல்துறை அதிகாரிகளால் அதே இடத்தில் அந்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் பெண்கள் நீண்ட காலமாக அந்த விடுதிக்கு வந்து, மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள்களில் திரும்பிச் சென்று வந்துள்ளனர் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

