சிங்கப்பூரில் ஆடவர் ஒருவர் இன்னொருவர் முகத்தில் குத்திய சம்பவம் மரணத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த கடும் கைகலப்பில், அமிருதீன் என்பவர் தேவன் என்பவர் முகத்தில் குத்தினார்.
குத்து பலமாக இருந்ததால் தேவன் பின்னோக்கி விழுந்தார் என்றும் இதனால் அவரின் தலை தரையில் மோதி மண்டை ஓட்டில் எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திரு.தேவன், ஒரு வாரத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட 27 வயதான அமிருதீனுக்கு நேற்று அக்டோபர் 13 ஆம் தேதி, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகையான ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவும் வாகனம் ஓட்டவும் தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியது, செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றிய குற்றத்தை அமிருதீன் ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு, இரு குழுக்களும் பாலஸ்டியர் பாயிண்டில் உள்ள ஒரு பாரில் தனித்தனியாக மது அருந்திக் கொண்டிருந்தபோது கைகலப்பு ஏற்பட்டு நடந்தது.
கட்டுமான தளத்தில் கிரேன் கவிழ்ந்து உடைந்து விபத்து: 37 வயது ஊழியருக்கு அறுவை சிகிச்சை