Last Updated:
Purattasi Amavasai| புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து மற்றும் பண்டிகை தேவையை பொறுத்து இந்த விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் மணக்கும் மாநகரான மதுரையில் மல்லிகை பூ தனித்துவமானது. மதுரை மல்லியின் மனம் மற்றும் தன்மை இதற்கு முக்கிய காரணமாகும். மதுரையைச் சுற்றியுள்ள தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் உசிலம்பட்டி, சத்திரப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் இருந்து மதுரை மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மதுரை பூமார்க்கெட்டில் தினமும் 20 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, மதுரை மல்லிகை கிலோ ரூ.600-க்கும், பிச்சி ரூ.300-க்கும், முல்லை ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.40, செண்டு மல்லி ரூ.30, கனகாம்பரம் ரூ.500-க்கு விற்பனையாகிறது.
ரோஸ் கிலோ ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.150, கோழிக்கொண்டை ரூ.50, அரளி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தாமரை பூ ஒன்று ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விளைச்சல் குறைவு, சந்தை வரத்து மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை ஒட்டி அதிகரிக்கக்கூடிய தேவை ஆகியவற்றை பொறுத்து வரும் நாட்களில் பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

