சிங்கப்பூர்: மதுபோதையில் வாகனத்தை மரத்தில் மோதியற்காக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் சாம்பல் நிற வேன் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி நிற்பதை காணொளியில் காண முடிகிறது.
அதிகாரிகளை பார்த்ததும் கல்லாங் ஆற்றில் போ*தைப்பொருள் பையை வீசிய வெளிநாட்டு ஆடவர் கைது
SGRV இன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், யுங் ஹோ சாலையில் வேன் தடுமாறி வளைந்து செல்வதைக் காணலாம்.
நம் பார்வைக்கு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிகிறது. பின்னர் அந்த வாகனம் தாமான் ஜூரோங்கில் உள்ள செர்டிஸ் சிஸ்கோ கட்டிடத்திற்கு வெளியே உள்ள மரத்தில் மோதியது.
விபத்தைத் தொடர்ந்து, இந்த காணொளி காட்சியை பதிவுசெய்த காரின் ஓட்டுநர் அவரின் வாகனத்திலிருந்து இறங்கி, விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்த ஓட்டுநருக்கு உதவி செய்ய ஓடுவதையும் காண முடிகிறது.
அந்த வழியாகச் சென்ற மேலும் இருவர் உதவி செய்ய அங்கு விரைந்து செல்வதையும் காண முடிந்தது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து புகை வெளியாவதையும் பார்க்கலாம்.
SGRV பதிவின்படி, ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகவும், விபத்து நடந்த பிறகும் கூட அக்சிலேட்டரில் இருந்து காலை எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
யுங் ஹோ சாலையில் நள்ளிரவு 1:05 மணியளவில் ஜாலான் துகோங் நோக்கி சென்ற வேன் தானாக சறுக்கி விபத்தில் சிக்கியதை சிங்கப்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியது.
இதனை அடுத்து, மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 44 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Image: SGRV
சிங்கப்பூர்-மலேசியா அதிரடி சோதனை: 11 பேர் கைது – 41 பேர் மீது விசாரணை
The post மதுபோதையில் வாகனத்தை மரத்தில் மோதிய ஆடவர் கைது (Video) appeared first on Tamil Daily Singapore.

