Last Updated:
புனேவில் மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்து உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் மழையால் திருமண சடங்குகள் நடத்த முடியாமல் தவித்த இந்து ஜோடிக்கு, அருகே மற்றொரு திருமண மண்டபத்தில் இருந்த இஸ்லாமிய ஜோடி மேடையை பகிர்ந்தது நெகிழ்ச்சியை ஏற்டுத்தி உள்ளது.
திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்து திருமணத்தின் போது மழை குறுக்கிட்டதால், அருகே இருந்த மண்டபத்தில் திருமணம் செய்த இஸ்லாமிய ஜோடி, இந்து ஜோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புனே-வின் வன்வோரி பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்குருதி- நரேந்திரா தம்பதியின் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் மழை பெய்ததால் விருந்தினர்கள் அவதிப்பட்டனர். மேலும் சில திருமண சடங்குகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த மைதானத்திற்கு அருகே உள்ள அரங்கில் இஸ்லாமிய ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், அவர்களிடம் இந்து ஜோடியின் குடும்பத்தினர் அங்கு சடங்குகளை செய்துகொள்ள அனுமதி கோரினர். உடனே இஸ்லாமிய ஜோடியின் குடும்பத்தினர் அதற்கு அனுமதி அளித்ததுடன், அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய உதவினர். தொடர்ந்து, இஸ்லாமிய புதுமண ஜோடியான மஹீம் – மோஹ்சின் ஆகியோர் இந்து தம்பதியுடன் மேடையை பகிர்ந்து கொண்டனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


