உயிர்ம வேளாண் கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, விதைச்சான்று மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இயற்கை வேளாண்மை விவசாய குழுக்கள், இயற்கை வேளாண் இடுபொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் இயற்கை வேளாண் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சார்பில் சிறப்பான முறையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.


