அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆக்கபூர்வமான அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே செல்வச் செழிப்புடன் இருந்த தீவக பிரதேசங்கள் இன்று பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.
கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகளும் இப்பேர்ப்பட்ட செயற்பாடுகளில்தான் ஈடுபட்டார்கள்.
2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மூற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் தீவக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்ற எண்ணப்பாடோடும் முதன்முறையாக ரூபா 05 கோடி அரசாங்க அதிபர் மூலம் பிரதேச செயலருக்கு ஒதுக்கப்பட்டது.
அந்தக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்தவர் தற்போது ஆளுநராக இருக்கும் நாகலிங்கம் வேதநாயகன்.வேலணைப்பிரதேச செயலராக இருந்தவர் சுகுணரதி தெய்வேந்திரம்.
இந்த திட்டம் தொடர்பில் மக்கள் எவருடனும் இதனது சாதக,பாதக தன்மை குறித்து அலசி ஆராயாமல் பிரதேச சபை செயலாளருடனும் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் அப்போதைய வேலணை பிரதேச செயலர்.
2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்றுவரை 2026 வரை பிரதேச சபையிடம் கையளிக்கப்படவில்லை.
இந்த திட்டத்தை தூரநோக்கம் கொண்ட திட்டமாக அரச அதிகாரிகள் செயற்படுத்தவில்லை.
இங்கு அடிப்படை வசதிகள் கூட நிலையான கட்டுமானங்களில் அமைக்கப்படவில்லை.
ஒதுக்கப்பட்ட ரூபா 05 கோடிக்கும் அவர்கள் செலவழித்தது ஒன்றரை கிலோ மீற்றர் வீதி போடப்பட்டுள்ளது ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவிற்கு.
தீவகத்தில் 2015 ஆம் ஆண்டு கிரமங்கள் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கி கிடந்தன.இந்த ஒன்றரை கிலோ மீற்றர் வீதிக்கு 68 மின்குமிழ்கள் சூரிய ஒளி மின்கலம் மூலம் போடப்பட்டுள்ளன. இன்று அவை எவ்வித செயற்பாடும் இல்லாமல் உள்ளன.
இவ்வாறு தீவக பகுதியில் இடம்பெற்ற ஊழல்களை புட்டு புட்டு வைக்கிறார் வேலணை பிரசே சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழக ஸ்தாபக தலைவருமான சுவாமிநாதன் பிரகலநாதன்.
அவர் இது தொடர்பாக ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்த மேலும் பல் விடயங்கள் காணொளியில்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

