மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் நாளையுடன்(நவ. 21) ஓய்வு பெறவுள்ள நிலையில், கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருந்தது.

