இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் கலவரமாக மாறி இதுவரை சுமார் 200 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னமும் அந்த மாநிலத்தில் கலவரம் ஓயாமல் தொடர்ந்து வண்ணமே உள்ளது.
அண்மையில், மணிப்பூர் மாநிலத்தின், ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், வீடுகள், கடைகளுக்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட குக்கி சமூகத்தினர், சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மெய்தி இன மக்கள் தங்கியிருந்த முகாம்களில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமான நிலையில், அவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, மெய்தி சமூகத்தினர் நடத்திய போராட்டத்திலும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், ஜிரிபாமில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் இரு சமூகங்களிலும் மாறி மாறி சடலங்கள் மீட்கப்படும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ எட்டியுள்ளது. அதேபோல், முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (18-ம் தேதி) மாலை 6 மணிக்கு நடக்க இருக்கிறது. அதேசமயம், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் படி என்.ஐ.ஏ. விசாரணையும் துவங்கியுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனையும் நடத்தினார்.
இதையும் படியுங்கள் :
வருத்தம் தெரிவித்த தளவாய் சுந்தரம்! மீண்டும் பொறுப்பு வழங்கிய அதிமுக
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், 50 கம்பெனி மத்திய ஆயுதப்படை காவலர்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, மத்தியப்படை வீரர்கள் மற்றும் மணிப்பூர் மாநில காவலர்கள் பணியை செய்யவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அங்கு தொடர்ந்து கலவரம் நடந்துவருவதால், மணிப்பூரின் மேற்கு மற்றும் கிழக்கு இம்பாலில் உள்ள அனைத்து உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமை (நாளை 18ம் தேதி) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)