Last Updated:
மணிப்பூரில் அடுத்தடுத்து நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 2 பெண்கள் உட்பட 4 குக்கி சமூகத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் தமேங்லாங் மாவட்டத்தில் உள்ள டோலன் கிராமத்தில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் இந்தத் தாககுதலை அரங்கேற்றினர். கைமாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கிராமத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று குறிவைக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் லிங்சாங்காய் சிங்சிட் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சீனே சிங்சிட் மற்றும் 6 வயது மகன் ஆகியோரும் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.


