பின்னர் அந்த லாரியை சோதனை சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும், அங்கிருந்த காவலர்களிடம் வழக்குப்பதிவு செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இருப்பினும் கரூரில் இருந்து மணல் கடத்தப்பட்டதால் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி நாமக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மணல் லாரியுடன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வழக்குப்பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

