• Login
Wednesday, September 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பு கொலை சம்பவம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பு கொலை சம்பவம்: சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொக்கட்டிச்சோலை வயல் பிரதேசத்தில் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் திகதி கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோரன் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.


கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு  பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்து    மற்றும்    இளம் தாயின் 3 வயது 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டனர்..


இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.


இதன்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்திரைக்கு  வழங்கும் மாத்திரை களை பழச்சாறு ஜூஸ் கொடுத்து கடத்தி கொலை செய்து கொள்ளையிட்டு வந்த சூத்திரதாரிகளான காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த  கொள்ளை குழுவினரான வெற்றிவேல் சதீஸ்வரன் அவருடைய 26 வயதுடைய  மனைவி சோமசுந்தரம் சர்லியா. மற்றும் கணவனின் சகோதரனான  22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும். மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த  ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை மார்ச் 21ம் திகதி  24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர்.


அதனை தொடர்ந்து கொள்ளை கும்பலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒரு வரை மார்ச் மாதம் வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயுடன் கைது செய்ததுடன் கொள்ளையர்கள் அவர்களது வீட்டின் நிலத்தில் புதைத்து வைத்திருந்த   சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே, மாத்திரைகள் என்பவற்றை  மீட்டதுடன்  மயக்க மாத்திரைகள் வழங்கிய வெளிநாட்டு சப் ஏஜென்சியான கொழும்பு வத்தளை பகுதியில் மருந்து விற்பனை நிலையம் (பாமசி) உரிமையாளரான சிவா என அழைக்கப்படும் திவாகரன் உட்பட 7 பேரை கைது செய்தனர்.


இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 22 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த இரு கடை உரிமையாளர்கள்;, மயக்க மருந்து ஸ்பிரேயர் வைத்திருந்த ஆட்டோ சாரதி, மற்றும் (பாமசி) உரிமையாளர் உட்பட 4 பேரையும் நீதிமன்ற பிணையில்  வெளிவந்த துடன் கொள்ளையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.


இதில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு எதிராக  கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு  3 குற்றச்சாட்டின் கீழ் முதலாவது குற்றமான மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்து யூஸ் கொடுத்து அவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட கணவன் மனைவிக்கும்


இரண்டாவது குற்றமான பழுகாமத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்து யூஸ் கொடுத்து கடத்தி சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவரை கொக்கட்டிச்சோலை செல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் வீசி கொலை செய்த கணவன் மனைவிக்கும்.


மூன்றாவது குற்றமான வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் அவரது 3 வயது 4 மாதம் கொண்ட குழந்தைக்கு மயக்க மாத்திரை கலந்த யூஸ் வழங்கி முச்சக்கரவண்டியில் கடத்தி சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு இளம் தாயை ஏற்கனவே பெண் ஒருவரை கடத்தி கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்த அதே கிணற்றில் அவரை வீசியதுடன் அவரது குழந்தையை சதுப்பு நிலப்பகுதியில் தனியாக விட்டு சென்ற கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோதரனுக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்தனர்


இதன் பிகாரம் குறித்த  வழக்கு விசாரணைக்காக கடந்த 28 திங்கட்கிழமை திறந்த நீமிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதவான்3 பேரையும்  வழக்கை எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்



Read More

Previous Post

சிறுவர் சட்டத்தின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம், தூண்டுதல் தொடர்பான பிரிவுகளை விரிவுபடுத்த அரசு பரிசீலித்து வருகிறது – Malaysiakini

Next Post

தங்கம் விலை 5840 ரூபாய் சரிவு.. அதிர்ச்சியில் மக்கள்.. இது வெறும் ட்ரைலர் தான் பாஸ்! | Gold Price Crash Alert: 24K Gold Drops ₹5,840 Per 10g in September as Rates Hike Fears Surge

Next Post
தங்கம் விலை 5840 ரூபாய் சரிவு.. அதிர்ச்சியில் மக்கள்.. இது வெறும் ட்ரைலர் தான் பாஸ்! | Gold Price Crash Alert: 24K Gold Drops ₹5,840 Per 10g in September as Rates Hike Fears Surge

தங்கம் விலை 5840 ரூபாய் சரிவு.. அதிர்ச்சியில் மக்கள்.. இது வெறும் ட்ரைலர் தான் பாஸ்! | Gold Price Crash Alert: 24K Gold Drops ₹5,840 Per 10g in September as Rates Hike Fears Surge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin