மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயதுடைய இளைஞன் பலியாகியுள்ளார்.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு அருகில் உள்ள வாவியில் விழுந்த நிலையில் குறித்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில்,
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
“மட்டு. திருப்பெருந்துறை, 04வது குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய
கதிர்செல்வன் பரமநாதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விமானபடை முகாமிற்கு அருகில் உள்ள திருப்பெருந்துறை செல்லும் வீதியில்
சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து மோட்டார் சைக்கிள்
தடம்புரண்டு அருகிலுள்ள வாவிக்குள் வீழ்ந்துள்ளது.
இதையடுத்து விமான படையினர் பொதுமக்கள் வாவியில் இருந்து இளைஞனை மீட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்” என தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |
