• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதியின் பணிப்புரை

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதியின் பணிப்புரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து
விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.


குறித்த விடயத்தை சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக
ஆராய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார
ஜயகொடி, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தேசிய மக்கள் சக்தியின்
அமைப்பாளர் பிர்தோஸ் நழீமி ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன்
தலைமையில் அரச அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (28)
கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைத்து உதவி

இதில் அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர், திணைக்களங்களின் தலைவர்கள்
கலந்துகொண்டு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக
ஆராயப்பட்டதுடன் அனர்த்தங்களினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பொதுமக்களின்
பாதுகாப்பு, அவர்களுக்கான உணவு விடயங்கள், சுகாதார நடவடிக்கைகள் மற்றும்
பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.



இதில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் “மாவட்டத்தில் பெருமளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது பாதிப்புகள் குறித்த
விபரங்கள் பெறப்பட்டதும் அதற்கான நஸ்ட ஈடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதியின் பணிப்புரை | Gov Assistance Flood Affected People In Batticaloa


அதேவேளை அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான
வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதிகளை அரசாங்கம் ஒதுக்குவதற்கு தயாராக உள்ளது.



ஜனாதிபதியினால் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான
உதவிகளை வழங்குமாறு பணிப்புரைக்கு அமைய விஜயம் மேற்கோண்டு
ஆராய்ந்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து
உதவிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்
எவ்வாறாயினும் மக்களை பாதுகாக்கும் வகையிலான அனைத்து செயற்பாடுகளையும்
முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து இரு அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நாவலடி நாமகள்
வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தாங்கல் முகாமில் தஞ்சமைந்துள்ள
மக்களை சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

GalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

இந்தாண்டு பிள்ளைகள் கொடுமைப்படுத்தல் தொடர்பில் 2,240 வழக்குகள் பதிவு | Makkal Osai

Next Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin