• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம் | Democracy will become a mockery if the Governor keeps bills on hold for years: Supreme Court

GenevaTimes by GenevaTimes
August 21, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும்: உச்ச நீதிமன்றம் | Democracy will become a mockery if the Governor keeps bills on hold for years: Supreme Court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும் என உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு கருத்து தெரி​வித்​துள்​ளது.

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க ஆளுநர் மற்​றும் குடியரசுத் தலை​வருக்கு உச்ச நீதி​மன்​றம் கால நிர்​ண​யம் செய்த விவ​காரத்​தில், குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று தொடர்ச்​சி​யாக மூன்​றாவது நாளாக நடந்​தது.

அப்​போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஒரு அரசி​யல் சாசன அமைப்பு மற்​றொரு அரசி​யல் சாசன அதி​காரம் படைத்த அமைப்​புக்கு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது என்​பதை உச்ச நீதி​மன்​றம் ராமசந்​திர ராவ் வழக்​கில் ஏற்​கெனவே தெளிவுபடு்த்​தி​உள்​ளது. ஒரு​வேளை உச்ச நீதி​மன்​றம் காலநிர்​ண​யம் செய்​வ​தாக இருந்​தா​லும் அதை உத்​தர​வாக அல்​லாமல் பரிந்​துரை​யாக செய்​திருக்க வேண்​டும். சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் பல்​வேறு அளவு​கோல்​கள், காரணங்​கள், இடர்​பாடு​கள் உள்​ளன. அனைத்​தை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும்’’ என்​றார்.

அதற்கு நீதிப​தி​கள், ‘‘அதற்​காக தொடர்ந்து எந்த காரண​மும் தெரிவிக்​காமல் கிடப்​பில் போட்​டால் அத்​துடன் எல்​லாம் முடிந்து விடு​மா, அதற்கு தீர்வு காண வேண்​டா​மா’’ என்​றனர். பதி​லுக்கு துஷார் மேத்​தா, ‘‘அரசி​யல் சாசன சட்​டத்​தில் இவ்​வாறு எந்த காலநிர்​ணய​மும் செய்​யப்​ப​டாத போது உச்ச நீதி​மன்​றம் அதில் குறுக்​கிட்டு கால நிர்​ண​யம் செய்ய முடி​யாது. அது நாடாளு​மன்​றத்​தி்ன் பணி. அரசி​யல் ரீதியி​லான தீர்வு தான் சரி​யாக இருக்​கும். நாட்​டில் உள்ள அனைத்து பிரச்​சினை​களுக்​கும் உச்ச நீதி​மன்​றத்​தில் தீர்வு கிடைத்​து​வி​டாது. அத்​தகைய பிரச்​சினை​களுக்கு அரசி​யல் சாசன சட்ட ரீதி​யாகவே தீர்வு காண முடி​யும்’’ என்​றார்.

அப்​போது தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், ‘‘அந்த அரசி​யல் சாசன சட்​டத்​தின் தலை​மைப் பாது​காவலரே உச்ச நீதி​மன்​றம் தான். குடியரசுத் தலை​வர், ஆளுநர், முதல்​வர் என அரசி​யல் சாசன பதவி வகிக்​கும் ஒரு​வர் காரணமின்றி தனது கடமையை செய்ய மறுத்​தால் உச்ச நீதி​மன்​ற​மும், உயர் நீதி​மன்​றங்​களும் கைகட்​டிக்​கொண்டு வேடிக்​கைப்பார்க்க வேண்​டும் எனக்​கூற முடி​யு​மா? நீதித்​துறை அமைப்​பு​களுக்கு அதி​காரம் இல்​லை​யா? தவறு நடந்​தால் அதற்கு தீர்வு காண வேண்​டா​மா? கால​வரையற்ற அதி​காரம் ஆளுநருக்கு இருப்​ப​தாகக் கூறி​னால் முறை​யாக மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேர​வைக்கு என்ன அதி​காரம் உள்​ளது’’ என்​றார்.

அதற்கு துஷார் மேத்​தா, சட்​ட​மியற்​றும் பணியை உச்ச நீதி​மன்​றம் மேற்​கொள்ள முடி​யாது. சட்​டப்​பேர​வை, அரசு நிர்​வாகம், நீதித்​துறை என ஒவ்​வொரு அமைப்​பு​களுக்​கும் ஒவ்​வொரு வித​மான பணி​கள் உள்​ளன. இவையனைத்​துமே அரசி​யலமைப்பு சட்​டத்​தின் பாது​காவலர்​களே. குடியரசுத் தலை​வரும், ஆளுநர்​களும் இப்​படித்​தான் செய​லாற்ற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் இவர்​களின்

அதி​காரங்​களை நீதி​மன்ற பரிசோதனைக்கு உட்​படுத்த முடி​யாது. இதற்கு ஒரே தீர்வு அரசி​யல் சாசனத்தை திருத்​து​வது​தான். அது​வரை இந்த பிரச்​னைக்கு அரசி​யல் ரீதி​யாகத்​தான் தீர்வு காண வேண்​டும். ஆனால் உச்ச நீதி​மன்​றம் தனது சிறப்பு அதி​காரத்தை பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை திருத்த முடி​யாது, என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்கும் விவ​காரத்தை நீதி​மன்றவிசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யும். பெரும்​பான்மை உறுப்​பினர்​களால் சட்​டப்​பேர​வை​யில் ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை ஆளுநர் காரணமில்​லாமல் ஆண்​டுக்​கணக்​கில் கிடப்​பில் போட்​டால் ஜனநாயகம் கேலிக்​கூத்​தாகி விடும். இந்த விஷ​யத்​தில் தமிழகம் மட்​டுமல்​லாது வேறு சில மாநிலங்​களும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களைத்​ தொடர்ந்​துள்​ளன’’ எனக்​கூறி இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.26-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.



Read More

Previous Post

கடைக்குச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Next Post

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய், அல்லது பதவி விலகு – பத்லினாவுக்கு வலியுறுத்து! – Malaysiakini

Next Post
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய், அல்லது பதவி விலகு – பத்லினாவுக்கு வலியுறுத்து! – Malaysiakini

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய், அல்லது பதவி விலகு – பத்லினாவுக்கு வலியுறுத்து! – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin