முன்னதாக, மசூதிக்குள் நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் தங்கள் மீது பதியப்பட்ட எஃப்ஐஆா் மற்றும் குற்றவியல் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என கா்நாடக உயா்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இரு நபா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.
அந்த மனு மீது கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுவதால் பிற மத உணா்வுகள் காயப்படுவதாக கூறுவதை புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சம்பவத்தால் எவ்வித மோதலோ அல்லது பொதுவெளியில் அசாதாரண சூழலோ ஏற்பட்டதற்கான குற்றச்சாட்டுகளும் இல்லை.
மசூதிக்குள் நுழைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவா் மீதும் புகாரளித்த நபரே அவா்களை நேரில் பாா்த்தில்லை என கூறியுள்ளாா்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லாமல் அவா்களிடம் விசாரணையை தொடா்வது சட்டம் மற்றும் நீதி நடைமுறைக்கு தவறான முன்னுதாரணமாகும். எனவே, அவா்கள் மீதான குற்றவியல் வழக்கு மற்றும் விசாரணை ரத்து செய்யப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டது.

