Last Updated:
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 முதல் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 1931ஆம் ஆண்டில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகப்போர் உள்ளிட்ட காரணங்களால், சாதிவாரிக் கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தள்ளிப்போனது. இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப் பிரதேச மாநிலங்களில் மட்டும் 2026ஆம் ஆண்டு அக்டோபரில் மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யவேண்டும் வாஜ்பாய் அரசாங்கத்தால் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
June 16, 2025 2:26 PM IST


