• Login
Friday, April 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 15, 2026 6:53 AM IST

நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மக்களவையில் எம்பிகளின் எண்ணிக்கை கடந்த 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, தொகுதிகளை மீண்டும் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போதைய மக்களவையில் அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் என்ற நிலையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்யவே தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின்படி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 850 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதில் யூனியன் பிரதேசங்களின் 35 தொகுதிகளும் அடக்கம்.

மகளிர் இடஒதுக்கீட்டை முன்கூட்டியே அதாவது 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில்

அதை விரைவுபடுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன், மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி தொகுதி மறுவரையறையில் மகளிருக்கு சுமார் 280 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இம்மசோதாக்களை நிறைவேற்ற 16 முதல் 18ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதனிடையே தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படும் பட்சத்தில் 50, 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்வது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுசீரமைப்பை அமல்படுத்த நினைப்பது மக்கள் விரோதச் செயல் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

Read More

Previous Post

பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு கலாசார விழா

Next Post

ஆண் குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது | Makkal Osai

Next Post
ஆண் குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது | Makkal Osai

ஆண் குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில் ஆடவர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin