• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் விருப்பம் | Modi must be defeated: Pakistan ex-minister

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் விருப்பம் | Modi must be defeated: Pakistan ex-minister
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அடிக்கடி வாழ்த்து தெரிவித்து வருபவர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பவாத் சவுத்ரி. இந்நிலையில் அவர் இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது:

தற்போது இந்தியாவில் நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்க வேண்டும். பிரதமர் மோடியைத் தோற்கடிக்க ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்தத் தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டுமானால் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கி வரவேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் மோடி தோல்வியுற வேண்டும்.

பாகிஸ்தானில் இந்தியா மீது வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் பாஜக-ஆர்எஸ்எஸ் கொள்கைகள் பாகிஸ்தான் மீது வெறுப்பைத் தூவுகின்றன. இந்தியாவிலுள்ள வாக்காளர்கள் முட்டாள்கள் அல்ல. முன்னேறிய, வளர்ச்சி பெற்ற நாடாக இந்துஸ்தானம் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம்.

மோடியைத் தோற்கடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாழ்த்துகள். அது ராகுல் காந்தியோ அல்லது அர்விந்த் கேஜ்ரிவாலோ அல்லது மம்தா பானர்ஜியோ.. அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு பவாத் சவுத்ரி தெரிவித்தார்.



Read More

Previous Post

எல்ஐசி சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் கோடியை தாண்டியது: பாகிஸ்தான், நேபாளம், இலங்கையின் மொத்த ஜிடிபியைவிட அதிகம் | LIC manages money nearly double the size of Pakistan economy

Next Post

‘ஆங்கிலத்தில் பேச சொன்ன ரசிகர்கள்’ – ராஷ்மிகா அளித்த ருசிகர பதில் | Makkal Osai

Next Post
‘ஆங்கிலத்தில் பேச சொன்ன ரசிகர்கள்’ – ராஷ்மிகா அளித்த ருசிகர பதில் | Makkal Osai

'ஆங்கிலத்தில் பேச சொன்ன ரசிகர்கள்' - ராஷ்மிகா அளித்த ருசிகர பதில் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin