Last Updated:
மகிந்திரா வாகன தொழில் பிரிவு தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1996ம் ஆண்டு முதல் மகிந்திராவில் பணியாற்றி வருகிறார்.
மகிந்திரா குழுமத்தின் வாகன தொழில் பிரிவு தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலுசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த குழுமத்தின் பல்வேறு துறைகளில் மூத்த அதிகாரிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்படி, வாகன தொழில்நுட்பம் மற்றும் PRODUCT DEVELOPMENT பிரிவின் தலைவராக இருந்த வேலுசாமி, வாகன தொழில் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலுசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுசாமி 1996ம் ஆண்டு முதல் மகிந்திரா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்து உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர் இவர்.
இந்நிலையில் தான் இவருக்கு பதவி உயர்வாக வாகன தொழில் பிரிவு தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாகன தயாரிப்பில் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையான அனைத்து பணிகளும் வேலுசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழுமத்தின் வாகன தொழில் பிரிவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வளர்ச்சியடைய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல விவசாய உபகரணங்கள் பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் சிக்கா, மகிந்திரா logistics பிரிவு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய உபகரணங்கள் தொழில் பிரிவு தலைவராக வீஜய் நக்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 22, 2025 10:52 AM IST
மகிந்திரா குழுமத்தில் தமிழருக்கு முக்கியப் பொறுப்பு.. வாகன தொழில் பிரிவு தலைவராக வேலுசாமிக்கு பதவி உயர்வு!


