• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகா கும்பமேளாவில் 30 பேர் பலி: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? – உ.பி காவல் துறை விளக்கம் | 30 people have lost their lives in the Maha Kumbh stampede – UP police

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகா கும்பமேளாவில் 30 பேர் பலி: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? – உ.பி காவல் துறை விளக்கம் | 30 people have lost their lives in the Maha Kumbh stampede – UP police
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரயாக்ராஜ்: பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலைக்கு முன்பு 1 – 2 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து 15 மணி நேரம் கடந்துவிட்ட நிலையிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தெளிவாக தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், 30 பேர் உயிரிழந்ததாக காவல் துறை மாலையில் தெரிவித்தது.

இதுகுறித்து கும்பமேளா டிஐஜி வைபவ் கிருஷ்ணா கூறுகையில், “பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு சுமார் 1-ல் இருந்து 2 மணிக்கு அகாரா மார்க்கில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் காரணமாக மறுபுறம் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்தது. இதனால் அக்கூட்டம் அப்படியே மறுபுறம் பிரம்ம முகூர்த்தத்தில் புனித நீராட காத்திருந்த பக்தர்கள் மீது விழுந்து மோதியது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஏறத்தாழ 90 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள், அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவ தலா ஒருவர் இதில் உள்ளனர். 36 பேர் காயம் காரணமாக உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பிவிட்டது. பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, அனைத்து மகாமண்டலேஷ்வரர்கள், சாதுக்காள், அகாராக்கள் சற்று தாமதமாக புனித நீராடுமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார். அகாராக்களின் அமிர்த ஸ்நானம் பாதுகாப்பாக முடிக்கப்பட்டது” என்றார்.

40 உடல்களா? – முன்னதாக, உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளூரில் உள்ள மோதி லால் நேரு மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டுவரப்பட்டன. சுமார் 40 உடல்கள் பிணவறையில் இருப்பதாக போலீஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவர்கள் “மருத்துவமனையில் 40 உடல்கள் உள்ளன. இன்னும் அதிகமான உடல்கள் வரலாம். நாங்கள் அவற்றை நடைமுறைகளுக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கிறோம்” என்று தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டள்ளன. சிலர் பிணவறையில் தங்கள் உறவினர்களின் உடல்களைத் தேடிக் கொண்டிருந்தனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? – முன்னதாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மூத்த போலீஸ் அதிகாரி வைபவ் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, “போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதில் தீவிரமாக இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரிவிக்க முடியவில்லை” என்றார். இதனிடையே, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அந்தத் துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்தனர். தனது உறவினர்களின் உடல்களுடன் ஆம்புலன்ஸில் இருக்கும்போது 40 வயதான ஜக்வந்தி தேவி கூறுகையில், “அங்கு ஒரே சத்தமாக இருந்தது, அனைவரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் இருந்தனர். முதலில் என் தாயார் தடுமாறி விழுந்தார். அடுத்து எனது மைத்துனியை மிதித்தபடி ஓடினர்” என்றார்.

தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்த நிலையில் அதற்கு போலீஸாரின் அலட்சியமே காரணம் என்று சரோஜா என்பவர் குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், “போலீஸார் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. இந்தச் சம்பவத்துக்கு அவர்களே காரணம்” என்று சாடினார். பிரயாக்ராஜில் உள்ள எஸ்ஆர்என் மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “எலும்பு முறிவு மற்றும் கை, கால்கள் உடைந்து மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். சிலர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்” என்றார்.



Read More

Previous Post

மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார்

Next Post

கேடிஎம் ரயிலில் அடிபட்டு ஆடவர் இறந்ததில் குற்றவியல் கூறுகள் எதுவுமில்லை

Next Post
கேடிஎம் ரயிலில் அடிபட்டு ஆடவர் இறந்ததில் குற்றவியல் கூறுகள் எதுவுமில்லை

கேடிஎம் ரயிலில் அடிபட்டு ஆடவர் இறந்ததில் குற்றவியல் கூறுகள் எதுவுமில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin