• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல்: “இது அரசியல் அமைப்பை காக்க நடக்கும் போர்”

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மகாராஷ்டிரா தேர்தல்: “இது அரசியல் அமைப்பை காக்க நடக்கும் போர்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா பகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது; “இந்திய ஒற்றுமை பயணத்தின்போது ‘வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை நாம் திறந்திருக்கிறோம்’ எனத் தெரிவித்தேன். காரணம் அரசியலில் அன்பு என்பதே இல்லாமல், வெறுப்பும் வன்முறையும் பரவியுள்ளது. அன்பால் மட்டுமே வெறுப்பை ஒழிக்கமுடியும். இது காங்கிரஸ் மற்றும் மகாத்மா காந்தியின் சிந்தனை.

விளம்பரம்

நமது அரசியல் அமைப்புச் சட்டம், ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், புத்தர், பசவண்ணா, நாராயண குரு மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரை பிரதிபலிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒற்றுமை, அன்பு, சமபங்கு உள்ளிட்டவை உள்ளன. இதில் எங்குமே வெறுப்பு என்பதே குறிப்பிடப்படவில்லை.

நரேந்திர மோடி இதனை படித்திருக்கவே மாட்டார் என்று உறுதியளிக்கிறேன். அவர் படித்திருந்தால், அதில் எழுதியிருப்பதற்கு மதிப்பு கொடுத்திருப்பார்.

அரசியல் அமைப்புச் சட்டம் இருப்பதனால் இன்னும் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸும் எப்போதும் இதன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மகாராஷ்டிராவில் உங்கள் அரசை பாஜக திருடியபோது, அரசியல் அமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தியது.

விளம்பரம்

இந்திய நிறுவனங்களில் உள்ள உயர் பொறுப்புகளில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் அதன் ஆட்களை நியமித்ததன் மூலம், அரசியல் அமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தியது.

இதையும் படியுங்கள் :
“காங்கிரஸின் சதிவலையில் விழ வேண்டாம்” – பிரதமர் மோடி வேண்டுகோள்

சோயா விதை மற்றும் பருத்தி மூலம் விவசாயிகள் வருமானம் ஈட்டினர். ஆனால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பணம் கிடைக்கவில்லை. நரேந்திர மோடி கொண்டுவந்த மூன்று கருப்புச் சட்டங்களுக்கு எதிராக நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிராக நின்றனர். ஆனால், அவர் இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானது எனப் பேசினார். அப்படியே அது விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்களாக இருந்தால் ஏன் விவசாயிகள் சாலையில் திரண்டனர்.

விளம்பரம்

இந்தியாவின் நிறுவனங்கள் மக்களுக்கானது. எந்த தனிநபருக்கும் சொந்தமானது கிடையாது. எங்களது முதல் வேலை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது. அடுத்து 50% இடஒதுக்கீட்டை ரத்து செய்வது. விவசாயிகள், உழைப்பாளர்கள், சிறு முதலாளிகள் என அனைவரையும் மதிக்கக்கூடிய இந்தியாவை நாம் உருவாக்குவோம்.

இதையும் படியுங்கள் :
“தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

பணக்காரர்களுக்கு நரேந்திர மோடி கொடுக்கும் பணம் போல் நாம் மகாராஷ்டிராவில் உள்ள ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், உழைப்பாளர்களுக்கும் வழங்குவோம்.

விளம்பரம்

இது சித்தாந்தத்திற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தை காக்கவும் நடக்கும் போர். இந்தப் போரில் அன்பால் வெறுப்பை வீழ்த்துவோம். ஆனால், பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் அரசியல் அமைப்பை அழிப்பதில் தீவிரமாக உள்ளன” என்று பேசினார்.

.

Read More

Previous Post

இலங்கை அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலும் மேற்குலக நாடுகள்

Next Post

IND vs BAN : 12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி

Next Post
IND vs BAN : 12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி

IND vs BAN : 12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin