Last Updated:
நாக்பூரில் பச்சு கடு தலைமையில் 15 ஆயிரம் விவசாயிகள் கடன் ரத்து செய்யக் கோரி 2-வது நாளாக மறியல்.
நாக்பூரில் விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விவசாயக் கடனை முற்றிலும் ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும், பிரகார் கட்சித் தலைவருமான பச்சு கடு தலைமையில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாக்பூர் – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ரயில் நிலையங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடனை ரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மும்பைக்கு வருமாறு பிரகார் கட்சித் தலைவருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாக்பூரில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பச்சு கடு, நிபந்தனை விதித்துள்ளார்.
October 29, 2025 9:33 PM IST


