• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிராவில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம்… திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடல்… ஏன் தெரியுமா…?

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகாராஷ்டிராவில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம்… திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடல்… ஏன் தெரியுமா…?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 14, 2025 9:33 PM IST

பலாவா மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் கதாய்-நீல்ஜே மேம்பாலம் ஷில்பட்டாவிற்கும், கல்யாணுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் ஒரு முக்கிய இணைப்பாக இருக்கக்கூடிய மேம்பாலம். இந்த பாலம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது.

News18News18
News18

பலாவா மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் கதாய்-நீல்ஜே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் சறுக்கு மண்டலமாக மாறியது. இதனால் அது உடனடியாக மூடப்பட்டது.  இந்த மேம்பாலத்தை ஜூலை 4ஆம் தேதி டோம்பிவ்லியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ராஜேஷ் மோர் திறந்து வைத்தார். ஷில்பட்டாவிற்கும், கல்யாணுக்கும் இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் ஒரு முக்கிய இணைப்பாக இருக்கக்கூடிய இந்த மேம்பாலம், ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது.

திறப்பு விழா நாளன்று, இரண்டு பைக்குகள் மேம்பாலத்தில் வழுக்கி விழுந்தன. மேலும், மேம்பாலத்தில் உள்ள தார் சாலை உள்ளிட்டவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சில நாட்களுக்குள், பயணிகள் அதை “சறுக்கும் மண்டலம்” என்று முத்திரை குத்தினர். மேலும் கற்கள், சேற்றுப் பகுதிகள், சிமென்ட் கசிவுகள் மற்றும் சீரற்ற முறையில் போடப்பட்ட தார் ஆகியவை மேம்பாலத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இந்த மோசமான கட்டடத்தின் நிலை பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. மேம்பாலத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால், அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன.

இந்த திட்டமானது ஷில்பட்டா மற்றும் கல்யாண் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. மேம்பாலம் கட்டும் பணி 2018இல் தொடங்கியது. 562 மீட்டர் நீளமுள்ள மேம்பாலம் இந்த ஆண்டு ரூ.250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. ஷில்பட்டா-கல்யாண் சாலையில் இரண்டு இணையான பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இருப்பினும், இந்திய ரயில்வேயின் பிரத்யேக சரக்கு வழித்தடத்தை (DFC) விரிவுபடுத்தும் திட்டத்தைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் இந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், தடைகளைத் தாண்டி இந்த ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. இதை சிவசேனா எம்எல்ஏ ராஜேஷ் மோர் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: கடும் வெப்ப அலை… காஷ்மீரில் அதிகரித்துள்ள AC விற்பனை…!

ஆனால், பாலம் திறக்கப்பட்டதில் இருந்து, சாலை கட்டுமானம் குறித்த கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஏனெனில், திறப்பு விழா நாளில் இரண்டு பைக் ஓட்டுநர்கள் பாலத்தில் வழுக்கி விழுந்தனர். அப்போதில் இருந்து, இதுபோன்ற விபத்துகள் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் (MSRDC) ஒப்பந்ததாரர்கள் நாள் முழுவதும் அந்த இடத்தில் வேலைசெய்து, ஆபத்தான பகுதிகளில் பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், இது ஏன் நடந்தது என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 14, 2025 9:33 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மகாராஷ்டிராவில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம்… திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடல்… ஏன் தெரியுமா…?

Read More

Previous Post

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம்: CEO-வின் அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

Next Post

செல்சீ அணி சாம்பியன் – கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது? | Chelsea wins Club fifa World Cup title Defeats PSG

Next Post
செல்சீ அணி சாம்பியன் – கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது? | Chelsea wins Club fifa World Cup title Defeats PSG

செல்சீ அணி சாம்பியன் - கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி எப்படி இருந்தது? | Chelsea wins Club fifa World Cup title Defeats PSG

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin