• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Maharashtra | 4 people die after falling from train due to overcrowding

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Maharashtra | 4 people die after falling from train due to overcrowding
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை 9.30 மணி அளவில் ரயில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரயில்கள் எதிரெதிர் திசைகளில் சென்றபோது, இரண்டு ரயில்களிலும் நெரிசல் காரணமாக படிகளில் பயணித்த ​​பயணிகளின் முதுகுப்பைகள் உரசிக் கொண்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் ஓடிக்கொண்டிருந்தபோது, ​​குறைந்தது 10 பயணிகள் கீழே விழுந்ததாகவும், இது குறித்து கசாரா நோக்கிச் செல்லும் ரயிலின் காவலர், ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததாகவும் அவர்கள் கூறினர். ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கீழே விழுந்த பயணிகள் அனைவரும் கல்வாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களில் நான்கு பேர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இந்தப் பாதையில் தினமும் காலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இது மிகவும் சோகமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களின் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் விரைவாக வழங்கப்பட்டுள்ளன. அவசர மற்றும் விரிவான சிகிச்சையை வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம், விபத்துக்கான சரியான காரணம் இந்த விசாரணையின் மூலம் விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, “கசாரா செல்லும் ரயிலின் காவலர், தண்டவாள ஓரத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து காலை 9.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பயணிகள் எந்த ரயிலில் இருந்து விழுந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. விபத்து எப்படி நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் (CSMT) இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட லக்னோ செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் விழுந்ததாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

மும்பையில் நடந்த மும்ப்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து, மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு மூடும் வசதிகள் இருக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கதவு மூடும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

கனடாவில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post

பஜாஜ் வாகன விற்பனை 8% உயா்வு

Next Post
பஜாஜ் வாகன விற்பனை 8% உயா்வு

பஜாஜ் வாகன விற்பனை 8% உயா்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin