Last Updated:
“மகாராஷ்ட்ராவின் பெண்புலி” என அழைக்கப்பட்ட தேசிய மல்யுத்த வீராங்கனை அஸ்வினி, தனது 3 குழந்தைகளுடன் நல்டுர்க் கோட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் பிரபல முன்னாள் மல்யுத்த வீராங்கணை அஸ்வினி மனோகர் பால். இவர் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அஸ்வினி, அதன்பிறகு 2008-ஆம் ஆண்டு குர்தாஸ்பூரிலும், 2009-ஆம் ஆண்டு சென்னையிலும் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததால், அஸ்வினி “மகாராஷ்டிராவின் பெண் புலி” என்ற பெயரால் பிரபலமாக அறியப்பட்டார்.


