• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே தகவல் | Maharashtra new Chief Minister to be elected today

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் இன்று தேர்வு: ஏக்நாத் ஷிண்டே தகவல் | Maharashtra new Chief Minister to be elected today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ம​காராஷ்டிரா​வின் புதிய முதல்வர் இன்று தேர்வு செய்​யப்​படு​வார் என்று ஏக்நாத் ஷிண்டே தெரி​வித்​துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்​பேரவை தேர்​தலில் பாஜக, ஷிண்​டே​வின் சிவசேனா அணி, அஜித் பவாரின் தேசி​யவாத காங்​கிரஸ் அணி அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்​றது. தற்போது மகாராஷ்டிர முதல்​வராக ஏக்நாத் ஷிண்​டே, துணை முதல்​வர்​களாக தேவேந்திர பட்னா​விஸ், அஜித் பவார் பதவி வகிக்​கின்​றனர். இந்த சூழலில், புதிய முதல்​வராக தேவேந்திர பட்னா​விஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்​துள்ளதாக கூறப்​படு​கிறது. இதற்கு ஷிண்டே தரப்பு ஆட்சேபம் தெரி​வித்​த​தால் புதிய அரசு பதவி​யேற்​ப​தில் சிக்கல் நீடித்து வந்தது.

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அனைத்து நிகழ்ச்​சிகளை​யும் ரத்து செய்​து​விட்டு தனது சொந்த கிராமமான சாத்​தா​ரா​வில் முகாமிட்​டார். அவரது உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக கூறப்​பட்ட நிலை​யில் பட்னா​விஸ் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு நலம் விசா​ரித்​தார். இந்நிலை​யில், சாத்​தா​ரா​வில் செய்தி​யாளர்​களிடம் ஷிண்டே நேற்று கூறிய​தாவது: முதல்​வராக கடந்த இரண்டரை ஆண்டு​களாக பதவி வகிக்​கிறேன். ஒருநாள்கூட விடு​முறை எடுத்தது கிடை​யாது. எனது தலைமை​யில் தேர்தலை சந்தித்​தோம். இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்​ளது. பிரச்​சா​ரத்​துக்காக கடினமாக உழைத்​த​தில் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டது. ஓய்வெடுப்​ப​தற்காக சாத்​தா​ரா​வுக்கு வந்துள்ளேன்.

பாஜக கூட்​ட​ணி​யில் கருத்து வேறு​பாடு இல்லை. பிரதமர் மோடி​யும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து, புதிய முதல்வரை முடிவு செய்​வார்​கள். புதிய முதல்வர் டிசம்பர் 2-ம் தேதி (இன்று) தேர்வு செய்​யப்​படு​வார். அவருக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்​போம். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் கூறும்​போது, “பாஜக எம்எல்​ஏக்கள் கூட்டம் டிசம்பர் 3-ம் தேதி (நாளை) நடைபெறும். இதில் புதிய முதல்வர் அதிகாரப்​பூர்​வமாக அறிவிக்​கப்​படு​வார். பதவி​யேற்பு விழா 5-ம் தேதி நடைபெறும். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்​பார்​கள்” என்றார். துணை முதல்​வராக ஏக்நாத் ஷிண்​டே​வின் மகன் ஸ்ரீகாந்த் பதவி​யேற்க உள்ளதாக தகவல்கள் வெளி​யாகி வருவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

Gold Rate | மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

Next Post
Gold Rate | மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

Gold Rate | மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin