பாஜக எங்களுக்கு பெரிய அல்லது மூத்த சகோதரர் போன்றது என்பதை நாங்கள் புரிந்து இருக்கிறோம், ஆனால் அது கூட்டணியில் உள்ளவர்களை புறக்கணிக்கும் அளவுக்கு பெரிய முதலாளியாக இருக்கக்கூடாது” என்று மற்றொரு சிவ சேனை தலைவர் கூறுகிறார்.
சிவ சேனை (உத்தவ் பிரிவு) தலைவர் சுஷ்மா அந்தாரே கூறுகையில், சில அடிப்படையற்ற ஆய்வு முடிவுகளைக் காட்டி, சிவ சேனையிடமிருருந்து பாஜக சில தொகுதிகளைப் பறிக்க நினைக்கிறது என்கிறார்.
பாஜகவை சமாளிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் எளிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்திருக்க வேண்டும். பாஜக ஆதிகக்க கட்சி, அது எப்போதும் கூட்டணிக் கட்சிகளின் நலன்களைப் பற்றி எண்ணாது. உத்தவ் தாக்கரே பாஜகவை முறையாகக் கையாண்டார், ஆனால் ஷிண்டே தோல்வியடைந்துவிட்டார்” என்று சிவ சேனை (உத்தவ் பிரிவு) எம்எல்ஏவும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி மேலவைத் தலைவருமான ராவ்சாகேப் தனவே கூறினார்.
மறுபக்கம், முன்னாள் அமைச்சர் கணேஷ் நாயக்கின் மகன் சஞ்சீவ் நாயக்கை தாணே மக்களவை தொகுதியிலும், அமைச்சர் ரவீந்திர சவானை கல்யாண் தொகுதியிலும், மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை சிந்துதுர்க்-ரத்னகிரி மக்களவையிலும் போட்டியிடவைக்க பாஜக விரும்புகிறது.
இந்த இழுபறி இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், இது குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் வகையில், பாரம்பரியமாக சிவ சேனை போட்டியிடும் இந்த தொகுதிகளில் எல்லாம் பாஜகதான் போட்டியிடப்போகிறது என்பதை சம்பாஜி நகரில் அமித் ஷா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டே பிரிவிலும் பூசலா?
ஒருபக்கம் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக மற்றும் சிவ சேனை (ஷிண்டே பிரிவு) இடையே ஏற்பட்ட மோதலால், ஷிண்டே பிரிவில் உள்ளவர்கள் தலைவர் மீது அதிருப்தியில் உள்ளனர். ஒருவேளை, பாஜகவின் கோரிக்கையை ஷிண்டே ஏற்றுக்கொண்டால், அது சிவ சேனை தொண்டர்களுக்கு தவறான செய்தியை அனுப்பும் என்று மட்டும் உறுதியாக எச்சரித்துவிட்டனர் ஷிண்டேவுக்கு. இனி என்ன செய்யப்போகிறார் ஷிண்டே என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

