• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகள் கொலைக்கு பழிக்குப்பழி… வீடு தேடி சென்று தந்தை செய்த சம்பவம்

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகள் கொலைக்கு பழிக்குப்பழி… வீடு தேடி சென்று தந்தை செய்த சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 07, 2025 10:48 PM IST

மாண்டியாவில் மகள் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த தந்தை வெங்கடேஷ், கொலையாளி நிதீஷின் தந்தை நரசிம்மகவுடாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

News18News18
News18

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் மகள் கொலை செய்யப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்த தந்தை, கொலையாளியின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்து இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவின் பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி தீபிகா. 28 வயதான தீபிகா மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வேலைக்கு சென்ற தீபிகா, வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நான்கு நாட்கள் கழித்து அவரது உடல், மேலுகோட் நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 22 வயதான நிதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீபிகாவும், நிதீஷும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், நிதிஷை தன் தம்பி என்று தீபிகா கூறி வந்தார். குடும்பத்தினர் எச்சரித்ததால் நிதீஷுடன் பேசுவதை தீபிகா கைவிட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிதீஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்று குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. சிறையில் இருந்த நிதீஷ், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார்.

நிதீஷ் சகோதரிக்கும், ஒரு இளைஞருக்கும் வருகிற 11ம் தேதி தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிதீஷ் குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில் நிதீஷ் தந்தையும், விவசாயியுமான நரசிம்மகவுடா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தீபிகாவின் தந்தை வெங்கடேஷ், நரசிம்மகவுடாவிடம் பேச்சுக் கொடுத்து இருக்கிறார்

என் மகளை உன் மகன் கொன்று விட்டான்.. உன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டு நரசிம்ம கவுடாவிடம், வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார் அப்போது ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரசிம்மகவுடாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நரசிம்மகவுடா உயிரிழந்து விட்டார்

இதை பார்த்து தேநீர் கடைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்த பாண்டவபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நரசிம்மகவுடா உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடேஷை தேடி வருகின்றனர். பழிக்கு, பழியாக நடந்த இந்த கொலை, மாணிக்யனஹள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published :

May 07, 2025 10:48 PM IST

Read More

Previous Post

காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு | rohit sharma to be removed as team india test cricket captain sources

Next Post
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு | rohit sharma to be removed as team india test cricket captain sources

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு | rohit sharma to be removed as team india test cricket captain sources

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin