Last Updated:
ஷென் சீனாவில் தனது மகள் யியி உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்தார். மருத்துவ செலவுக்காக வீட்டில் சிகிச்சை பெற்று, சமூக ஊடகத்தில் அனுபவம் பகிர்கிறார்.
சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், தனது பச்சிளங் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதுடன், செலவுகளை சமாளிக்க வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவது பலரையும் உருக வைத்துள்ளது.
சீனாவில் ஒரு இளம் தந்தை, தனது சின்னஞ்சிறு மகளின் உயிரைக் காப்பாற்ற கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்து, பின்னர் தனது மருத்துவச் செலவுகளை மிச்சப்படுத்த, வீட்டிலேயே தனது காயங்களுக்கு சிகிச்சையளித்து வருவது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷென் என்பவர், ஆகஸ்ட் 13 அன்று தனது மகளுக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கினார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவ செலவுகள் ஏற்கனவே 100,000 யுவான் (இந்திய ரூபாய் மதிப்பில், சுமார் 12 லட்சத்தை) தாண்டியதால், ஷென் மருத்துவமனையிலிருந்து சீக்கிரமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிலேயே தனது சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
2024-இல் திருமணமான ஷென் மற்றும் அவரது மனைவி தாவோவுக்கு, ஒரு மகள் பிறந்தாள், அவர்களது தங்களது மகளுக்கு யியி என்று பெயர் வைத்தனர். பிறந்த சில வாரங்களிலேயே, யியி மஞ்சள் காமாலை நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தாள். பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, யியிக்கு மரபணு காரணமாக ஏற்பட்ட கல்லீரல் நோய் மற்றும் சிரோசிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில், மருந்துகள் போதுமானதாக இருக்கும் என மருத்துவர்கள் கருதினாலும், பின்னர் யியியின் நிலைமை மோசமடைந்து, கல்லீரல் மாற்றமே உயிர் வாழ்வதற்கான ஒரே வாய்ப்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தனது மகளின் சிகிச்சைக்காக, இந்த இளம் தம்பதியினர் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் வேலை செய்த ஷென், யியி-யின் நிலை மோசமடைந்ததால் வேலையை விட்டு, பின்னர் சிறிய வேலைகளில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தினார். மேலும் செலவைக் குறைக்க, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே தனது காயங்களைத் தானாகவே கவனித்துக் கொள்ளத் தொடங்கினார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரங்களிலேயே, இன்னும் முழுமையாக குணமடையாத நிலையிலும், அவர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளார்.
ஷென் தம்பதி, “யியி ஃபைட்டிங் மான்ஸ்டர்ஸ்” என்ற சமூக ஊடகக் கணக்கின் மூலம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதில் ஷென் தனது கட்டுகளைத் தானாகவே மாற்றிக் கொள்வது போன்ற வீடியோக்கள் பலரின் இதயங்களை நெகிழ வைத்துள்ளன. ஏற்கனவே அந்த கணக்கிற்கு 6,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர்.
September 13, 2025 6:45 PM IST
மகளுக்காக கல்லீரல் தானம், செலவை குறைக்க வீட்டிலேயே சிகிச்சை – மனதை உருக்கும் தந்தையின் செயல்


