Last Updated:
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் ஆவேசமாகப் பேசியது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாகச் சாலையை மறித்து பேரணி சென்ற மகாராஷ்டிரா பாஜக அமைச்சரிடம் பெண் ஒருவர் கடுமையாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகளிர் மசோதாவுக்கு ஆதரவாக மும்பை வோர்லி பகுதியில் பாஜக மகளிர் அணி தரப்பில் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பெண், திடீரென கூட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த அமைச்சர் கிரிஷ் மகஜான், பாஜக நிர்வாகிகள், காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
महिलांच्या सशक्तीकरणाच्या नावाखाली राजकारण करणाऱ्या, आरक्षणाचा मुद्दा पुढे करून महिलांची दिशाभूल करणाऱ्या आणि त्यांना केवळ राजकीय साधन म्हणून वापरत खोटे नॅरेटिव्ह पसरवणा-या भाजपाचा खरा चेहरा या भगिणीने वरळीहून निघालेल्या मोर्चासमोर जाऊन उघडा पाडला आहे.
महिला आरक्षणाच्या आडून… pic.twitter.com/XqsPfhZY9c
— Harshwardhan Sapkal (@INCHarshsapkal) April 21, 2026
பெண்ணின் துணிச்சலான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் ஆனால் அதை அவர் வெளிப்படுத்தியது தவறான முன்னுதாரணம் என அமைச்சர் கிரிஷ் மகஜான் தெரிவித்துள்ளார்.
Apr 22, 2026 10:07 PM IST

