Last Updated:
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசன் இன்று மும்பையில் தொடங்குகிறது, முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், மும்பையில் இன்று தொடங்க உள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஆண்டுதோறும் திருவிழா போன்று ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான டபிள்யூபிஎல் டி20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டபிள்யூபிஎல் தொடரின் நான்காவது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் களம் காண்கின்றன.
இதன் போட்டிகள் முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. முதல் 11 ஆட்டங்கள் மும்பையிலும் அடுத்த 11 ஆட்டங்கள் வதோதராவிலும் நடைபெற உள்ளன. எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டிகள் வதோதராவில் நடைபெற உள்ளன. 28 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர், 22 ஆட்டங்களை கொண்டதாக இருக்கும்.
நவிமும்பையிலுள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் 2023 மற்றும் கடந்த ஆண்டு என இதுவரை 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், 2024ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியும் மோத உள்ளன.


