Last Updated:
மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதுகின்றன. மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விறுவிறுப்பாக நடந்த வந்த மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இன்றிரவு மும்பை-டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மும்பை, உத்தரபிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கின. 5 அணிகளில் புள்ளிப்பட்டியல் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற நிலையில், டெல்லி- மும்பை அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி தனது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற மும்பை அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் போட்டி நடை பெற இருக்கிறது.
March 15, 2025 7:23 AM IST