Last Updated:
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்.30-ம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்.
உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி – தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை (நவ.2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
மகளில் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி வாகை சூடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பிசிசிஐ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசுத் தொகை வழங்கிய நிலையில், மகளிர் அணிக்கும் அதே தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. அப்போது இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தற்போது 8 ஆண்டுகள் கழித்து இந்திய அணி வீரர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு 10 மடங்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
November 01, 2025 5:50 PM IST


