Last Updated:
50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்தது.
50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்தியா நுழைந்தது.
நவி மும்பையில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்களை குவித்தது. உலக சாதனை இலக்கான 339 ஐ நோக்கி இந்தியா ஆடியது. நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிருதி மந்தனா எதிர்பாராது அவுட் ஆக, ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பாக ஆடினர்.
89 ரன்களில் கவுர் அவுட் ஆனார். ஆனால் இறுதிவரை 127 ரன்களுடன் அவுட் ஆகாமல் இந்தியா வரலாற்றுச் சாதனையுடன் வெற்றி பெற ஜெமிமா ரோட்ரிக்ஸ் உதவினார். இதே மைதானத்தில் ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்காவுடன் இந்தியா மோதுகிறது. இதில் யார் வென்றாலும் முதல் கோப்பையை அவர்கள் முத்தமிடுவர்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில், இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. 339 ரன்கள் இலக்கு என்பது ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் எந்தவொரு நாக் அவுட் போட்டியிலும் எட்டப்படாத இலக்கு ஆகும். மகளிர் ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக் கோப்பைத் தொடர்களில் நாக் அவுட் போட்டியில் சேஸிங்கில் சதம் அடித்த 2 ஆவது வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜெமிமா பெற்றார். இதுவரை நடந்த 12 உலகக்கோப்பை தொடர்களில் 7ல் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் அரை இறுதியில் அந்த அணி வெளியேறிய இரு முறையும் இந்தியாவே காரணமாக இருந்துள்ளது.
October 31, 2025 6:40 AM IST


