Last Updated:
8 நாடுகள் மோதும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வங்கதேச அணி எளிதாக வென்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 ஆவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய போட்டி இலங்கை தலைநகர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கிய முனீபா அலி 17 ரன்கள் எடுத்தார். ஒமைமா சொஹைல், சித்ரா அமின் தங்களது முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.
ரமீன் ஷமிம் 23 ரன்களும், அலியா ரியாஸ் 13 ரன்களும் சேர்க்க விக்கெட் கீப்பர் சித்ரா நவாஸ் 15 ரன்களும், கேப்டன் பாதிமா சனா 22 ரன்களும் எடுத்தனர். 38.3 ஓவர்கள் வரை விளையாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 31.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ரூபியா ஹைதர் 54 ரன்களும், கேப்டன் நிகார் சுல்தானா 23 ரன்களும், சோபனா மோஸ்டரி 24 ரன்களும் எடுத்தனர்.
October 02, 2025 10:00 PM IST


