ஜார்க்கண்ட்டில் தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் அளிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், மேலும் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர்களில் இருந்து வந்து பழங்குடியின மக்களின் நலத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு பழங்குடியினருக்கே அளிக்கப்படும் என்றும்
பழங்குடியினரை திருமணம் செய்துகொள்ளும் வெளியூர் மக்களின் குழந்தைகளுக்கு பழங்குடியின அந்தஸ்து கிடைக்காது என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளில், 5 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பொது சிவில் சட்டம் ஜார்க்கண்ட்டில் அமல்படுத்தினாலும் பழங்குடியினர் பொது சிவில் சட்ட வரம்பில் வரமாட்டார்கள் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்துக்கு வரும் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவாகும் வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)