Last Updated:
கேக் வெட்டிய பிறகு, தனது மகளின் உடலுக்கு அருகில் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். தகன மைதானத்தில் நடந்த உணர்ச்சிகரமான வீடியோ அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிகழ்வின்போது தந்தை தனது மகளுக்கு பிறந்தநாள் தொப்பியையும் அணிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டத்தில் நடந்த ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. ஒரு தந்தை தனது மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு தகன மைதானத்தில் உடலுக்கு அருகில் பலூன்களை வைத்து கேக்கை வெட்டினார். கேக் வெட்டிய பிறகு, தனது மகளின் உடலுக்கு அருகில் சென்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். தகன மைதானத்தில் நடந்த உணர்ச்சிகரமான வீடியோ அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்த நிகழ்வின்போது தந்தை தனது மகளுக்கு பிறந்தநாள் தொப்பியையும் அணிவித்தார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கவர்தா-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில்பி பள்ளத்தாக்கு அருகே, வேகமாக வந்த லாரி மீது பொலேரோ எஸ்யூவி மோதியது. இந்த காரில் ஆதித்ரி பட்டாச்சார்யாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அவரது குடும்பம் கொல்கத்தாவிலிருந்து கன்ஹா தேசிய பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த விபத்தில் ஆதித்ரி பட்டாச்சார்யா, அவரது தாயார் பரம் பட்டாச்சார்யா, ஓட்டுநர் அஜய் குமார் குஷ்வாஹா, உறவினர்கள் அன்வேஷா சோம் மற்றும் பாப்பி வர்மா உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆதித்ரியின் மூத்த சகோதரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த நேரத்தில் கொல்கத்தாவில் இருந்த ஆதித்ரியின் தந்தை இந்திரஜித் பட்டாச்சார்யா, விபத்து நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கவர்தாவிற்கு வந்தார். மருத்துவமனையின் பிணவறையில் தனது மனைவி மற்றும் மகளின் உடல்களை அடையாளம் கண்ட பிறகு, இறுதிச் சடங்குகளுக்காக அவர் தனியாக தகன மைதானத்திற்குச் சென்றார். உறவினர்கள் ஒருவர் கூட இல்லாமல் மகளுக்கும், மனைவிக்கும் தகனம் செய்ய வந்திருந்த தந்தையை கண்ட உள்ளூர்வாசிகள், அவருக்கு உதவ முன்வந்தனர்.
அதே நேரத்தில், இன்று தனது மகள் ஆதித்ரியின் பிறந்தநாள் என்று தந்தை சொன்னபோது, அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள். தந்தையின் துயரத்தைக் கண்டு, இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் அதே இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர். அவர்கள் அந்த இடத்தை பலூன்களால் அலங்கரித்தனர், கேக் வெட்டினர், அப்போது ஆதித்ரியின் தந்தை, அவரது புகைப்படத்திற்கு பிறந்தநாள் தொப்பியை அணிவித்திருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தந்தை மகளின் உடலை பலூன்களால் அலங்கரிப்பதைக் காணலாம். உடலில் சாக்லேட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தகனம் செய்யப்பட்ட இடத்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று எழுதப்பட்டுள்ளது. இந்தக் காட்சி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததால், இதைக் கேட்ட அல்லது பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது.
October 20, 2025 11:55 AM IST